பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தும் சுப்பர் மார்க்கெட்

பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தும் தாய்லாந்து சுப்பர் மார்க்கெட் ஒன்று அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது.

உலகம் முழுவதும் கரியமில வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதால், உலகின் வெப்பநிலை அதிகரித்து பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த சுப்பர் மார்க்கெட் ஒன்று பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலையை அறிமுகப்படுத்தி இருகிறது. இந்த சுப்பர் மார்க்கெட்டில் விற்கும் பொருட்கள் அனைத்தும் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அனைத்தும் வாழை இலையால் பொதியிடப்பட்டு வழங்கப்படுகிறது.

இதனை வாடிக்கையாளர்களும் வரவேற்று தங்களது ஆதரவை குறித்த சுப்பர் மார்க்கெட்டுக்கு வழங்கி வருகின்றனர்.