புதிதாக இரண்டு நெல் விதைகள் அறிமுகம்

பத்தளகொட நெல் ஆய்வு நிறுவனம் புதிதாக இரண்டு நெல் விதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பி.ஜீ.252 மற்றும் பி.ஜி – 374 என்ற பெயரில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பி.ஜீ. 252 ரக நெல்லை விதைத்து இரண்டரை மாதத்திற்குள் அறுவடையை பெற முடியும்.

ஒரு ஹெக்டயர் நிலபரப்பில் 100 தொடக்கம் 150 இற்கும் இடைப்பட்ட புசல் நெல்லை விதைக்க முடியும். இந்த நெல் விதை ஈரலிப்பு மற்றும் வறண்ட பிரதேசங்களிலும் இதனை உற்பத்தி செய்ய முடியும்.

பி.ஜி. 374 நெல் விதை மூலம் மூன்றரை மாதத்திற்குள் அறுவடையை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு ஹெக்டயர் வயல் காணியில் 150 தொடக்கம் 200 புசல் விதை நெல்லை விதைக்க முடியும்.