இலங்கை நெருக்கடியில் இருந்து மீளுவது தொடர்பில் IMF வழங்கிய தகவல்!

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு மற்றும் நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அதிகாரிகளுடன் கடந்த வாரம் பயனுள்ள தொழிநுட்ப ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு நாணய கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

நெகிழ்வான மாற்று விகிதங்கள் தேவை என கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பதில் பணிப்பாளர் ஏன் மேரி குல்ட் வூல்ஃப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கான கடன் தொகை மற்றும் பேச்சுவார்த்தை நிறைவடையும் காலம் என்பன குறித்து அவர் பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக வோஷிங்டன் சென்றுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு இதுவரை முடிவடையாத நிலையில், அவை இன்னும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com