லங்கா சதோச நிறுவனத்துக்கான பொருள் விநியோகத்தில் தடங்கல்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

கொடுப்பனவுகளில் நிலுவைக் காரணமாக அரச லங்கா சதோச நிறுவனத்துக்கான பொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொடுப்பனவு நிலுவையால் விநியோகஸ்தர்கள், சதோசவுக்கு பொருட்களை விநியோகம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்காக வர்த்தக அமைச்சு திறைசேரியிடம் இருந்து சுமார் 2 பில்லியன் ரூபா நிதியை எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிதியின் மூலம் சதோசவுக்கு தேவையான சர்க்கரை, வெங்காயம், தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், உள்ளிட்ட பொருட்களை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அரிசி போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2.2 பில்லியன் ரூபாவுக்கு உத்தரவாதத்தை அரச வங்கி ஒன்று வழங்கியிருந்தது.

சதோச நிறுவனம், விநியோகஸ்தர்களுக்கு 7.7 பில்லியன் ரூபாவை செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதோச நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் நட்டம் அதிகரித்து வருகிறது. இப்போது 19 பில்லியன் ரூபா நட்டத்தில் சதோச செயற்பட்டு வருகிறது.

சதோச நிறுவனத்துக்கு 2014இல் 3.46 பில்லியன் ரூபா நட்டமும், 2015இல் 1.97 பில்லியன் ரூபா நட்டமும், 2016இல் 5.11 பில்லியன் ரூபா நட்டமும், 2017இல் 2.78 பில்லியன் ரூபா நட்டமும், 2018இல் 2.92 பில்லியன் ரூபா நட்டமும், 2019இல் 3.18 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com