இலங்கை ஆடைத்துறையின் ஏற்றுமதி இலக்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர் எதிர்பார்ப்பு

இலங்கை ஆடைத்துறையின் 2025ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்காக 8 பில்லியன் அமெரிக்க டொலர் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனூடாக, நாட்டின் ஆடை ஏற்றுமதியை விரிவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த சில நாடுகளைத் தவிர்த்து ஏனைய நாடுகளுக்கும் எமது நாட்டின் ஆடைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில், இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் போன்ற வளர்ந்துவரும் சந்தைகளில் பாரிய பங்கினைக் கொண்டு, அளவிலான சந்தையை அணுகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.