சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது.

சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையானஒப்பந்தங்களின் நோக்கம்.

அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டுபார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன.

நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க-சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு வடிவில் நகரப்போவதை இந்த கூட்டு வர்த்தகஒப்பந்தம் புலப்படுத்துகிறது.

10 ஆசியான் நாடுகளுடன் , சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்ற கூட்டமைப்பிலில்லாத 5 நாடுகளும் இணைந்து, கடந்த நவம்பர் 15 ஆம் திகதியன்று, ‘முழுமையான பிராந்திய பொருளாதார பங்காளிக் கட்டமைப்பு’ (Regional Comprehensive Economic Partnership -RCEP ) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

கடந்த 8 வருடங்களாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் இடையில் வந்த TPP வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட டொனால்ட் டிரம்ப்மறுத்ததால். 2017 இல் TPP முழுமையாகக் கைவிடப்பட்டு , மீண்டும் ஆர்செப்பிட்கான(RCEP ) பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத் சீர்குலைவினால், வேறுவழியின்றி இக்கூட்டு ஒப்பந்தம் சாத்தியமானது என்கிற பார்வையுமுண்டு.

சீனாவைப் பொறுத்தவரை, அதன் உற்பத்தித்துறையில் ஓரளவு தேக்கநிலைகாணப்பட்டாலும், உற்பத்தியாகும் பண்டங்களிற்கான வாங்குதிறன் கொண்ட சந்தைகள்தேவைப்படுகிறது.

ஏனைய 14 நாடுகளுக்கும் இதேவிதமான பிரச்சினை, அளவு வேறுபாட்டுக்காணப்படுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக அவுஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிகழ்ந்தஇராஜதந்திர- பொருண்மியப்போர் தீவிரமடைந்திருந்தது. கொரோனா பரவல் குறித்து, சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையைதொடர்ச்சியாக முன்வைத்தது அவுஸ்திரேலியா அரசு.

இதனால் சினம் கொண்ட சீனா, அவுஸ்திரேலியா மீது பொருளாதாரத் தடையைவிதித்தது.

சீன துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலியா சரக்குக் கப்பலை தடுத்தது.

ஆனாலும் ஒரு மாதத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை சீனாவுடன் எந்தவர்த்தக ஒப்பந்தத்திலும் ஈடுபடாத ஜப்பான் தேசம், அமெரிக்க நட்பு வளையத்திலிருந்துவெளியே வருகிறது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com