2019 இலங்கை பயங்கரவாத தாக்குதலால் பொருளாதாரம் வீழ்ச்சி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமும் எதிர்மறையாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2020 ஆம் ஆண்டில் 4.5 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று மற்றும்அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டிலும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை எட்ட முடியாது என கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கின்ற தகவல்களின் பிரகாரம், இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் முதலாம் காலாண்டை விட மறை வீதமாகவே பதிவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்துள்ளது.

மிக குறுகிய காலத்திற்குள் இதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகின்று என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாவிடின், நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய சிக்கல் ஏற்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com