சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்டாட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் சர்வதேச பயணத்தடையை விதித்துள்ளன.

இதனால் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

இதன்காரணமாக சர்வதேச ரீதியில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 78 சதவீதம் வரை குறைந்து, அதன்மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் 1.2 ட்ரில்லியன் வரையிலான நட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com