பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக 8.5 மில்லியன் பேர்

2018 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், நாட்டில் 8.5 மில்லியன் பேர் பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 64.6 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன் 35.4 வீதமானவர்கள் பெண்கள் ஆவர்.

மேலும், பொருளாதார ரீதியில் வலுவற்றவர்களாக 7.7 மில்லியன் மக்கள் பதிவாகியுள்ளனர்.

சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் பிரசுரிக்கப்பட்ட இலங்கைத் தொழிற்படையின் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.