விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 12,000 மில்லியன் ரூபா நிதி

விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.