சம்பா மற்றும் நாட்டரிசியின் விலைகள் குறைப்பு

சம்பா மற்றும் நாட்டரிசியின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமுலுக்க வரும் வகையில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாயினாலும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாயினாலும், குறைக்கப்ட்டுள்ளதாக அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.