வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!

வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விவசாயத் திணைக்களம் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13,600 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை செய்கையினூடாக 24,000 மெட்ரிக்தொன் நிலக்கடலை அறுவடையை எதிர்பார்த்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.