இறப்பர் தொழில்துறையை மேப்படுத்துவதற்கு தீர்மானம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

உள்ளூர் இறப்பர் தொழில்துறையை மேப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பெருந்தோட்ட தொழில்த்துறை அமைச்சின் இலங்கை இறப்பர் செயலாளர் அலுவலகம் மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் இறப்பர் பொருள் அபிவிருத்தி மற்றும் சேவை மத்திய நிலையங்கள் ஆகியன இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைவாக, எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணிவரையில் பண்டிருப்பு வத்த பாடசாலை உற்பத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் ஒருநாள் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செயலமர்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சிலாப மாவட்ட அபிவிருத்தி சபையின் 032 22 22 093 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.