இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் பங்கெடுக்கும் CNBC

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இலங்கையின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்காக நுகர்வோர் மற்றும் வணிக செய்திகளுக்கான முன்னணி சர்வதேச தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.பி.சி முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்காக இந்த உதவியினை வழங்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இந்த நடுப்பகுதியில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒலிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.