யாழில் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கான ‘ திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள்’ தொடர்பான பயிற்சிகள் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று (2020.09.14) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிப் பயிலுநர்களுக்கான பயிற்சி ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’என்ற தொனிப்பொருளின் கீழ் தலைமைத்துவம், முகாமைத்துவம், அரச திணைக்களங்கள் தொடர்பான விடய ஆய்வு, தனியார் திணைக்களங்கள் தொடர்பான விய ஆய்வு, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் தொடர்பாக ஐந்து பிரிவுகளாக பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளன.