சுற்றுலா பயணிகளின் மையமாக மாற்றியமைக்க நடவடிக்கை

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு மாவட்டத்தை சுற்றுலா பயணிகளின் மையமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா அமைச்சின் செயலாளரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் கலந்துரையயாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அதனை கலாச்சார விழிமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நுதன சாலைகள் மற்றும் வணக்கமுறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்னணிகளை பிரதிபலிக்கும் விடயங்களையும் கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.