அரசாங்கத்திடம் இருந்து மற்றுமொரு நற்செய்தி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்ததா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்தமையினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான நிவாரணமாக இந்த கடன் வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழில் நடவடிக்கைகளில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக இதன்போது கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.