சுமூக நிலையை நோக்கி நகரும் கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

கொழும்பு பங்குசந்தை நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக சுமூக நிலையை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னைய காலத்தை விட தற்போது சிறந்த தன்மையை கொண்டுள்ளதாக கொழும்பு பங்கு சந்தையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மே மாதம் 11 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 235.5 பில்லியன் ரூபா மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குசந்தை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 5 ஆயிரத்து 801 புதிய முதலீட்டாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.