இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தை ‘எண்மான பரிவர்தனை ஆண்டாக’ பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே எண்மான பரிவர்தனையை செயல்பாடுகளை பிரபல்யப்படுத்த முடியும் என்பதை நோக்காக கொண்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தவிர, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்வு வங்கி பிரிவுடன் இணைந்து நாடளாவிய ரீதியாக ‘டுயமெயஞசு’ முறைமையை பிரபலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலகுவான முறையில் இலங்கை மத்திய வங்கியுடனான சகல செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மாத்தளையில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய செயலகத்தில் நேற்று இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வாடிக்கையாளர்களுக்கு திட்டம் குறித்து வழிப்புணவர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வர்த்தக வங்கிகள், அனுமதிபெற்ற விசேட தரத்தை கொண்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள், மற்றும் அரச சட்ட அமுலாக்கல் ஆகியனவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.