மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127வது

உலகிலேயே மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டு இடங்களை முந்தியுள்ளது.

அதன்படி, இலங்கை தற்போது உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 127வது இடத்தில் உள்ளது.

2021 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின், உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையின்படி, இலங்கை 129 வது இடத்தில் காணப்பட்டது.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் (2022) இலங்கை முன்னேற்றங்கண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் அறிக்கையின்படி, முதலாவது இடத்தை பின்லாந்தும், இறுதி இடத்தை ஆப்கானிஸ்தானும் பெற்றுள்ளன.

இந்த தரவரிசைப்படி, ஆசியாவின் எந்த ஒரு நாடும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

இந்த தரவரிசைப் பட்டியலின்படி, நேபாளம் – 84வது இடத்திலும், பங்களாதேஷ் – 94வது இடத்திலும், பாகிஸ்தான் – 121வது இடத்திலும், இந்தியா – 139வது இடத்திலும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் இப்பட்டியல் மக்களின் சொந்த கருத்துக்களின் மதிப்பீட்டின் அடிப்படை, பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com