நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள்

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது

22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது.

மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படுகின்றார்.

அவர் இதுவரை தனது இரு அயல்நாடுகளான சீனா இந்தியாவை உதவிக்காக நம்பியிருந்துள்ளதுடன் சர்வதேச உதவியை கடும் பிடிவாதத்துன் நிராகரித்து வந்துள்ளதால் – நாடு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன 11000க்கும் மேற்பட்ட எதிர்கட்சி ஆதரவாளர்கள் அரசாங்க அலுவலகத்திற்கு வெளியே கூடிநின்று அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரினார்கள்.

மின்சாரம்எரிபொருள் உணவு போன்றவற்றிற்கான தட்டுப்பாடு பரந்துபட்டளவில் காணப்படுவதுடன் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்கள் – முதல் இரண்டு வருட கொவிட்பெருந்தொற்று – உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயிர்த்தெழ நினைக்கும் சுற்றுலாத்துறையினர் வரை அனைவருக்கும் இந்த நிலை கடும் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம் 15 வீதமாக அதிகரித்துள்ளது- ஆசியாவிலேயே மிகமோசமானது.

இந்த நிலைக்கு ராஜபக்ச வம்சாவளி எவ்வளவு தூரம் காரணம் என்பதை மிகைப்படுத்துவது மிகவும் கடினம்.

2019 தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.இந்த ஜோடி என்பது பரிச்சியமானது போல தோன்றுகின்றது என்றால்-2004 இல் பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானர் மகிந்த – அவ்வேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார்2009இல் கிளர்ச்சியாளர்களுடன் போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கான பங்களிப்பிற்காக அவர் வசையுடன் கூடிய பெயரை பெற்றார்.

ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்- காணாமல்போயினர் தமிழ்பிரிவினைவாதிகள் பத்திரிகையாளர்கள் அரசியல் எதிராளிகள் சித்திரவதை செய்யப்பட்டனர் பாலியல் வன்முறைக்கு உட்படு;த்தப்பட்டனர் நீதிவிசாரணைக்கு புறம்பான கொலைகளிற்குட்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றனஇகோத்தபாய இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிக்கின்றார்.

ராஜபக்சாக்கள் 2015 முதல் சிறிது காலம் பதவியில் இல்லாமலிருந்தனர்.அக்காலப்பகுதியில் மைத்திரிபாலசிறிசேனவும் ரணில்விக்கிரமசிங்கவும்; ஆட்சியிலிருந்தனர்.2018 இல் ரணில்விக்கிரமசிங்க பதவி நீக்கப்பட்டமை அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது.

2020 பொதுத்தேர்தலில் கட்சி மகத்தான வெற்றியை பெற்றதை தொடர்ந்து அரசாங்கம் மிகவேகமாக ஜனாதிபதிக்கு மீண்டும் முன்னர் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரங்களை வழங்கியது2021 இல் இன்னொரு சகோதரர் பசில்ராஜபக்ச நிதியமைச்சராக்கப்பட்டார்.அவரது அமெரிக்க இலங்கை இரட்டைப்பிரஜாவுரிமை காரணமாக அவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய நபராக காணப்பட்டார்இரட்டை பிரஜாவுரிமையை தடைசெய்யும் அரசமைப்பின் ஏற்பாடு நீக்கப்பட்ட பின்னரே பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

மூத்த சகோதரர் சமல்ராஜபக்சவும் அமைச்சர்அவரது மகன் இராஜாங்க அமைச்சர்பிரதமரின் மகனும் அமைச்சர்இன்னொரு மகன் பிரதமரின் பிரதம அதிகாரி.

சில மதிப்பீடுகளின் படி வரவுசெலவுதிட்டத்தின் 75 வீதம் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.

இது வம்சாவளி அரசியலிற்கான சிறந்த உதாரணம்.

ஆனால்நாடு தற்போது சிக்குண்டுள்ள குழப்பநிலையிலிருந்து அதனை மீட்பதற்கு எந்த ராஜபக்சாக்களாலும் எதனையும் செய்ய முடியவில்லை.

பசில் ராஜபக்ச மார்ச் 16-17ம் திகதிகளில் இந்தியாவில் காணப்பட்டார்.ரஸ்யாவின் உக்ரைன் நடவடிக்கையால் உருவான எண்ணெய் விலை அதிகரிப்பினால் தீவிரமடைந்த நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான 1பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

உக்ரைன் ரஷ்ய யுத்தம் சுற்றுலாத்துறையை மோசமாக பாதிக்கின்றது.இலங்கைக்கு இந்த வருடம் விஜயம் மேற்கொண்டவர்களில் 30 வீதமானவர்கள் ரஸ்யா உக்ரைன் போலந்து பெலாரஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் .
இதேவேளை இலங்கையின் முக்கிய ஏறு;றுமதியான தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளில் ரஸ்யாவும் ஒன்று.

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை கோருவதில்லை என்ற சகோதரர்களின் நிலைப்பாடு தளர்ச்சியடைகின்றது.

இலங்கை அதிகாரிகள் திங்கட்கிழமை சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என புளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதமளவில் அவர்கள் கொள்கைகளை யோசனைகளை முன்வைக்கலாம்.

அரசாங்கம் சமீபத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்பார்ப்புகள் விருப்புகளிற்கு ஏற்ப நாணயத்தை பலவீனமாவதற்கும் கொள்வனவு செலவுகள் அதிகரிப்பதற்கும் அனுமதியளித்தது.ஆனால் நிபுணர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட விதத்தை விமர்சித்துள்ளனர்.

கடன் மறுசீரமைப்பே முதல் முன்னுரிமை என தெரிவித்தார் கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ரிசேர்ச்சின் நிசான் டிமெல் வட்டிவீதங்களை அதிகரித்தல்இநாணயபெறுமதியிறக்கம் ஆகியன அடுத்ததாக இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.

சிறிதுகாலமாக நிலைமையை பிழையாக கையாண்டதால் – நிலைமை மேலும் நெருக்கடியானதாக- இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கூட காணப்படாததாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.

2022 இல் இலங்கை செலுத்தவேண்டிய மொத்த கடன் 7 பில்லியன்டொலர்களாக காணப்படுகின்ற அதேவேளை அதன் அந்நிய செலாவணி கையிருப்பு 2 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.

இலங்கை செலுத்தவேண்டிய கடனை திருப்பி செலுத்த தவறுவதற்கு இன்னமும் மூன்றுமாதங்கள் உள்ளது என்கின்றார் டிமெல்.

அரசாங்கம் மிகவும் உறுதியான தீர்மானங்களை முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் அதிகரிக்கின்றன என்கின்றார் இலங்கையின் கொள்கை நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் துசிவீரக்கோன்
இந்த பிரச்சினையிலிருந்து இலகுவாக – துன்பமின்றி விடுபட முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார நிலைமை மேலும் இறுக்கமானதாக மாறிய பின்னரே மாற்றமடையும் என்கின்றார் அவர்.

2007 இல் அப்போதைய அரசாங்கத்தின் (capital borrowing) காரணமாகவே அனைத்தும் ஆரம்பமானது என துசி வீரக்கோன் தெரிவித்தார்.

இது தற்போது நாட்டின் கடனில் 38 வீதமாக காணப்படுகின்றதுஅதேவேளை சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் பத்துவீதமாக காணப்படுகின்றன.

இலங்கையின் பாரதூரமான நிலைமை காரணமாக அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கைகளை ஆரம்பத்தில் நம்பியிருந்தது பலனளிக்கவில்லை என்கின்றார் அவர்.

சர்வதேச நாணயநிதியத்தை அணுகுவதே தற்போது சிறந்த தெரிவு-இத்துடன் சீனா இந்தியாவிடமிருந்து உதவிகளை பெறும் முயற்சிகளும் இணைந்துகொண்டுள்ளன.

இந்தியா ஜனவரியில் 400 மில்லியனடொலர்swap ற்க்கு இணங்கியதுடன் 500 மில்லியன் டொலர் ஏசியன் கிளியரிங் யூனியன் கடனை ஒத்திவைப்பதற்கும் இணங்கியது. இந்தியாவும் சீனாவும் கடன்களை பெற்றுக்கொள்வதை தாமதிக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை சீனாவிடமிருந்து புதிய கடன்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியான அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் உட்கட்டுமான முயற்சிகள் காரணமாக என்ன தவறு இடம்பெறலாம் என்பதற்கான உதாரணமாக கருதப்படுகின்றது.

இலங்கை அந்த துறைமுகத்தை உருவாக்குவதற்காக பெரும் பணத்தை கொள்வனவு செய்தது – திருப்பி செலுத்த முடியவில்லை-அதன் பின்னர் கடன் நிவாரணமாக துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது.

இலங்கைக்கு தற்போது தேவைப்படும் நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய நபர் இல்லை கோத்தபாய .

எனினும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதன் காரணமாகவும்2024- 2025 வரை தேர்தல்கள் இடம்பெறப்போவதில்லை என்பதாலும் எதிர்கட்சிகளின் போராட்டங்கள் ஆட்சியின் மீதான குடும்ப ஆட்சியின் பிடியை வலுவிலக்கச்செய்யப்போவதில்லை.

புதன்கிழமை இரவு அவர் நாட்டிற்கு உரையாற்றினார்இநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்படப்போவதாக தெரிவித்த அவர் –கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து தான் உணர்பூர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் கடிகார முள் வேகமாக நகர்கின்றது – மக்கள் சீற்றத்துடனும் பசியுடனும் உள்ளனர்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் ஏற்படக்கூடிய எந்த தாமதமும் அரசாங்கம் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தும்-இது இலங்கையர் எவரும் பயணிக்க விரும்பாத பாதை

bloomberg
தமிழில்- தினக்குரல்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com