150 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 150 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் இதனை கொள்வனவு செய்வதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

10 ரூபாவுக்கும் குறைவான தொகையை வழங்க முன்வந்த நிறுவனங்களிடமிருந்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.

வருடத்தின் இறுதி காலாண்டில் மேலும் 15 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.