தொழில் முயற்சியாளர்களின் விற்பனைச் சந்தை நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் விற்பனைச்சந்தை நிகழ்வு நேற்று சேருவல பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

கொவிட் – 19 தொற்றுக்குப்பின்னர் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு படிமுறையாக இந்த விற்பனைச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு குறிப்பிட்டுள்ளது.