சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இந்தமுறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சிறுபோக நெல் அறுவடையில் 2 இலட்சம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதற்கு தேவையான 10 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடங்களில் சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும், சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

எனினும் தற்போது ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.