விமான நிலையங்களை திறப்பது மேலும் தாமதமடையும்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களை திறப்பது மேலும் தாமதமடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் முன்னர் திட்டமிடப்பட்ட வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்களை திறப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட்-19 பரவுதல் அடிப்படையிலேயே அது தொடர்பில் தீர்மானிக்க முடியுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 65 நாடுகளில் சிக்கி இருந்த 15 ஆயிரம் இலங்கையர்கள் இதுவரையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.