வட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தாண்டி அதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கலை தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.