பெண் தொழில் முயற்சியாளர்களின் கடன்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். தேசிய பொருளாதாரத்துக்கும் இவர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குகின்றனர். 2014 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் பிரகாரம், இந்த பங்களிப்புகளின் பெருமளவானவை பெண் தொழில் முயற்சியாண்மை ஊடாக பெறப்படுவதாகவும், இலங்கையில் காணப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகளில் 25% க்கும் அதிகமானவை பெண்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் 6.1% ஆன பெண்கள் aமட்டுமே நடுத்தரளவு வியாபார நிலைக்கு முன்னேற்றம் காண்கின்றனர். 4.6% ஆன பெண்கள் மட்டுமே பாரிய தொழில்முயற்சி நிலைக்கு முன்னேறுகின்றனர்.

பெண்களின் தொழில் முயற்சியாண்மை இந்த மெதுவான வளர்ச்சியை பதிவு செய்வதை வங்கித்துறை கண்டு கொள்வதில்லை. பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் சார்ந்த தீர்வுகளையும் அனுகூலங்களையும் பாரம்பரியமாக வங்கிகள் வழங்கி வருகின்றன. ஆனாலும் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி பிரிவில் ரூ. 50 பில்லியன் கடன் இடைவெளி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி தொடர்பில் உறுதியாக கவனம் செலுத்தும் SDB வங்கி இந்த கடன் இடைவெளியை இனங்கண்டு, பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரத்தியேகமான திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘SDB உத்தமி” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தினூடாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்திக்கொள்ளவும், சுபீட்சத்தை எய்தவும் நிதிசார் உதவிகள் வழங்கப்படுகின்றன.