மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியாவினால் உலக சந்தைகளுக்கு வழங்கப்படும் மசகு எண்ணெயின் அளவை மட்டப்படுத்தியமை மற்றும் அமெரிக்காவில் மசகு எண்ணெய் அகழ்வுப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டமை ஆகிய காரணிகளால் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரித்தானியாவின் பெரண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 66 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

இதற்கமைவாக, அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் 57 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.