வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும்

வர்த்தகர்களுக்காக தினமும் வரிச்சலுகை வழங்க முடியாதென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்றார். அத்துடன், புதிய வர்த்தக செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.