முதன்முறையாக இலங்கையில் வைத்திய உபகரண தொழிற்சாலை

இலங்கையில் வைத்திய உபகரண தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலை பத்து மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் அமெரிக்காவின் ப்ளெக்சி கெயார் (flexicare) வர்த்தக குழுமத்துக்கு உட்பட்ட பிளெக்சி கெயார் இலங்கை நிறுவனம் இதனை அமைக்கவுள்ளது.

நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையினால் அங்கிகரிக்கப்பட்ட வர்த்தக நிறுவனமாக உள்ளது.

சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் மின்சக்தி எரிசக்தி, வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இதற்கான அடிகல்லை இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டி வைத்துள்ளனர்.

கும்புக்க வீதி ரைகம மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

இத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வைத்திய உபகரணங்கள் மற்றும் வைத்திய உபகரணங்களின் பாகங்கள் ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இதன்மூலம் 600 பேருக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன் நீண்ட காலத்துக்கு இலங்கைக்கு வெளிநாட்டு வருமானமும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.