டொலரைப் பெற விரைவில் இந்தியாவுக்கு விஜயம்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடான இந்தியா உதவுமா என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இன்று இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியா மிகவும் சாதகமான பங்களிப்பை செய்துள்ளது. நாங்கள் இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலரைப் பெற உள்ளோம்.

இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கிடையிலான நெருங்கிய உறவுகளின் அடிப்படையில், பாரிய முதலீடுகள் போன்ற பல நன்மைகளை இலங்கை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கு வருகை தரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்த போது முன்னெடுத்த பயனுள்ள கலந்துரையாடலின் விளைவாக, இலங்கை இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலரைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து நாம் பெறும் 1 பில்லியன் அமெரிக்க டொலரை பெறுவதற்கு, அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவுக்குச் சென்று , அதற்கான உடன்படிக்கைகளில் கையொப்ப மிட்டு முடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com