ஏற்றுமதி நடவடிக்கைகளில் சரிவு

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்னரே ஏற்றுமதி நடவடிக்கைகள் சரிவடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 2020 ஆண்டின் முதல் இரண்டு மாத பகுதிகளில் ஏற்றுமதி நடவடிக்கைகள் 3.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியினுள் 193 கோடியே 10 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கை ஏற்றுமதியாளர்கள் 174 நாடுகளுக்கு 2 ஆயிரத்து 429 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, 26 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது.

அதேபோல் பெரிய பிருத்தானியா 9 கோடியே 50 லட்சம், இந்தியா 7 கோடியே 30 லட்சம், ஜோமனி 5 கோடியே 10 லட்சம் மற்றும் இத்தாலி 4 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.