உள்ளூர் மீனவர்களிடமிருந்து மீன்கள் கொள்வனவு

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய, தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய, 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O