அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக பணிக்குழு.

புலம்பெயர் மக்களையும் வட மாகாணத்தையும் இணைக்கும் புதிய ஓன்லைன் ஷாப்பிங்.  இங்கே அழுத்தவும்

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்குமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதோஸ, கீல்ஸ், லாப்ஸ், ஆர்ப்பிக்கோ, புட்சிற்றி, அரலிய, நிப்புண மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் இந்த செயற்பாட்டிற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குக் கொண்டுவந்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை வினைத்திறனாக செயற்படுத்த பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் A task force ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த படையணியின் உறுப்பினர்களாவர். அபாய வலயங்களான இனங்காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் மீள் அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், கேஸ் மற்றும் ஏனைய சேவைகள் தட்டுப்பாடின்றியும், தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாளையிலிருந்து ஆரம்பமாகிறது.

லொறி, வேன்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் பொருட்களை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் சகல வாகனங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வீதிகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து, தாயகத்திலுள்ள உங்கள் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பொருட்களை அனுப்பிட நாடுங்கள் http://bit.ly/38g6K4O