இத்தாலியின் வர்த்தக சமூகத்தினர் இலங்கை தொடர்பில் ஆர்வம்

புதிய சந்தை வாய்ப்புக்கள் மீது கவனம் செலுத்தியுள்ள இத்தாலியின் வர்த்தக சமூகத்தினர் இலங்கை தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளார்கள். இதற்காக சந்தையின் நம்பிக்கையை வென்றெடுப்பது உட்பட அத்தியாவசிய விடயங்களை பூர்த்தி செய்வது அவசியம் என்று இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆடை உற்பத்தி, காலணிகள், இனிப்புப் பண்டங்கள், மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் உட்பட பல்வேறு துறைகளில் இத்தாலியர்களுக்கு முதலீடு செய்ய முடியும் என அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இத்தாலிய வெளிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது அமைச்சர் கருத்து வெளியிட்டார்.