ஈர வலயத்தில் அறுவடை வீழ்ச்சி

பெரும்போக அறுவடை குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை ​தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஈர வலயத்தில் இம்முறை அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறண்ட வலயத்தில் சில பகுதியில் 10 தொடக்கம் 25 வீத அறுவடை வீழ்ச்சியடைந்திருக்கக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுபோகத்திற்கு தேவையான உரம் தொடர்பான பரிந்துரைகளை உர செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோகிராம் என்ற அடிப்படையில், பாஸ்பரஸ் உரமும் 60 கிலோகிராம் பொட்டாசியமும் பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர ஒரு ஹெக்டேருக்கு 1.5 வீத செறிவிற்கும் அதிகம் கொண்ட, 1000 கிலோகிராம் compost உரத்தையும் வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதிக்குள் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com