இலங்கையின் பாம் எண்ணெய் தயாரிப்பாளர்களின் 2020 ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி வாய்ப்புக்கள்

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே இலங்கையில் உள்ள உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுடன் hi2world.com 

2020ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் இலங்கையின் நிலையான பாம் எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சர்வதேச சந்தையில் கேள்வி எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பெருந்தோட்ட நிறுவனம் (PA) அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பாம் எண்ணெய் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளதனால் இந்த வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது. உலகளாவிய விதத்தில் ஏற்றுமதியின் விலை வீழ்ச்சி, தேசிய ரீதியில் பாவனையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகள் ஆகிய காரணங்களால் உலகில் பிரதான பாம் எண்ணெய் உற்பத்தியாளர்கள் இருவரும் பின்னடைந்துள்ளனர். உலகில் எந்த பகுதியிலும் பயிர்ச் செய்யக்கூடிய மிகவும் இலாபம் ஈட்டக்கூடிய பயிர்ச் செய்கையான பாம் எண்ணெய் செய்கை தொடர்பாக இலங்கை முழுவதிலும் பிழையான கருத்துக்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக சிறிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. பாம் எண்ணெய் உற்பத்தியின் நிலையான தன்மைகக்கு அழுத்தங்களை கொடுப்போர் மத்தியில் எதிர்மறையான கருத்துகள் நிலவி வருவதால் அது அவர்களை பெரிதளவில் பாதித்துள்ளது. அத்துடன் மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பாம் எண்ணெய் உற்பத்திக்காக தட்டையான காடுகளை அழிப்பது போன்ற தவறுகளை இலங்கையில் தடை செய்துள்ளமை குறித்து பெரும்பாலானோர் அறியாதுள்ளனர்.

தற்போது எமது நாடு சர்வதேச பாம் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக கொள்கையுடன் செயற்படுவதுடன் காடுகளை அழிக்காமல் இந்த பயிர்ச் செய்கையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது. பயனளிக்காத றபர் செய்கை நிலங்களை பாம் எண்ணெய் செய்கைக்காக மாற்றீடு செய்வதற்கு சுற்றுச் சூழல் ஆர்வளர்கள் மட்டுமன்றி பாவனையாளர்களினதும் விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்றுள்ள இந்த பொருளாதார அனுகூலத்தை சரியாக பயன்படுத்தாதவிடத்து நாடு என்ற ரீதியில் நாம் பின்னோக்கிச் செல்லவேண்டி ஏற்படுவதுடன், அரசியல் லாபம் மற்றும் வர்த்தக லாபத்திற்காக பாம் எண்ணெய் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்தல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தும்.

இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் பாம் எண்ணெய் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால் மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளைப் போலவே இங்கும் அந்த நிலைமை ஏற்பட்டால் ஒரு நிலையற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் இரண்டும் உலகளாவிய ரீதியில் பாம் எண்ணெய் உற்பத்தியில் 90% சதவீதத்தைக் கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணெய், சமையலுக்காக பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய் அல்லது சொக்லட், பிஸ்கட், ஷெம்போ, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் உள்ளிட்ட பெரும்பாலான தயாரிப்புக்களுக்காக பாம் எண்ணெய் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது.

2019ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மரக்கறி எண்ணெயின் பெறுமதியானது 220,000 மெற்றிக்தொன் ஆகும். அதற்காக செலவிடப் பட்ட தொகையானது 30 பில்லியனாகும். பாம் எண்ணெய்க்காக எதிர்ப்பு கருத்துக்களை முன்வைப்போர் இதுதொடர்பில் மௌனம் காக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மரக்கறி எண்ணெய் இறக்குமதி செயற்பாடுகளுக்கு பதிலாக லாபம் பெற்றுக் கொள்ள முடியாத றபர் செய்கைக்குப் பதிலாக நிலையான பாம் எண்ணெய் உற்பத்தியை ஸ்தாபிப்பதற்கான செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்துவது மிகச் சிறந்த தீர்மானமாகும்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அரைநூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையில் வெற்றிகரமாக செய்கைப் பண்ணப்பட்ட பாம் எண்ணெய்

இலங்கையின் ஈரவலயத்தில் பாம் எண்ணெய் செய்கை கடந்த 51 வருடங்களாக எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். பாம் எண்ணெய் செய்கைக்காக எதிர்ப்புக்கள் எழுவதற்கு அடிப்படை காரணமாக அமைவது நிலத்திலுள்ள அனைத்து தண்ணீரும் உறிஞ்செடுக்கப்படுவதாகும் அதனூடாக நிலம் வரட்சியடையும் எனவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் தோட்டங்களிலுள்ள விஷப் பாம்புகளினால் அண்மையிலுள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் அதிகரித்தல், மற்றும் அதுபோன்ற உண்மையற்ற கருத்துக்களால் இந்த செய்கைக்கு மேலும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

என்றபோதிலும் பாம் எண்ணெய் செய்கை மேற்கொள்ளும் தோட்டங்களில் கடமையாற்றும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரடியாக அந்த செய்கையினால் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான வாழ்வாதார வழியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழி ஏற்படுகின்றது.

இலங்கையில் முதன்முறையாக பாம் எண்ணெய் செய்கை மேற்கொள்ளப்பட்டது நாக்கியாதெனிய தோட்டத்திலாகும். அதில் கடமையாற்றும் ஊழியர் அறுவடையின்போது மாதம் ஒன்றுக்கு 50,000 ரூபா வருமானம் ஈட்டுகின்றார். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து நல்ல நிலையில் இருப்பதோடு றபர் தோட்டத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் பொதுவாக மாதம் ஒன்றுக்கு 18,000 ரூபாவை வருமானமாக பெறுகிறார். இதன் மூலம் பாம் எண்ணெய் செய்கையின் முக்கியத்துவம் தெளிவாக தெரிகிறது. தற்போது இலங்கையில் றபர் செய்கையில் சிக்கல் எழுந்து வருகின்ற நிலையில் சர்வதேச சந்தையில் றபருக்காக கிடைக்கும் லாபம் மிகக் குறைந்து காணப்படுகின்றமையும் இதற்கு காரணமாகும். என்றபோதிலும் எமக்கு மிகவும் இலகுவாக றபர் செய்கையை கைவிட முடியாதுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை மேற்கொள்ளும் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு றபருக்கான தேவையுள்ளது. என்றபோதிலும் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது உற்பத்தி செய்யும் அனைத்து றபர் கிலோவுக்கும் குறிப்பிடத்தக்க பணத்தை இழப்பது பாரதூரமான ஒரு நிலைமையாகும் என்பது அனைவரும் அறியாத விடயமல்ல.

எனினும் பாம் எண்ணெய் கிலோ ஒன்றுக்கு பாரிய இலாபத்தை ஈட்டுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு முடிந்துள்ளதுடன் இந்த செய்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிழையான கருத்துக்களால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் சிறியவை அல்ல. பாம் எண்ணெய் செய்கைக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரைத் தொடர்பு கொண்டு அதற்கு எதிராகவுள்ள அல்லது விஞ்ஞான ரீதியான தரவுகளைக் கேட்டால் கூட கடந்த 5 வருட காலத்திற்குள் ஒருவருக்காவது இதுவரைக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தரவை முன்வைக்கவில்லை.

காடுகளை அழித்தல், விலகுகளின் வாழ்விடங்களை அழித்தல் மற்றும் மேலும் பல எதிர்மறையான கருத்துக்கள் தொடர்பாக விடயங்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அளவிற்கு இலங்கைக்கு உரித்தானவை அல்ல. உண்மையிலேயே பாம் எண்ணெய் செய்கைக்கான எதிர்ப்பானது நாம் எமது நாட்டிற்கே செய்துகொள்ளும் பாதிப்பாகும். முன்னாள் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் கவனிக்கப்படாத விடயங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு நியாயமான விடையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போதுள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நாம் நம்புகின்றோம்.

நிலையான பாம் எண்ணெய் செய்கை தொடர்பாக மேன்மையடையும் சர்வதேச இணக்கப்பாடு எமது அண்டை நாடான இந்தியாவிலும் பாம் எண்ணெய் செய்கையை மேற்கொள்வதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளமை எமக்கு மிகுந்த உந்து சக்தியாக அமைந்துள்ளது. விவசாயம், சுற்றாடல் மற்றும் விஞ்ஞான அதிகாரிகளுடன் பாம் எண்ணெய் உற்பத்தி செயற்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது ஆலோசனைகளுக்கு அமைய விசேடமாக பாம் எண்ணெய் விரிவாக்க நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை இந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது. உணவுக்காக பயன்படுத்தும் எண்ணெய்யை பாதுகாத்தல், குறுகிய காலத்தில் மூன்று லட்சம் மெற்றிக் தொனினால் (300,000) பாம் எண்ணெய் அறுவடையை அதிகரித்தல் தொடர்பான விடயங்களை நோக்காகக் கொண்டவை.

இந்தியாவிலுள்ள பெருந்தோட்டங்களில் 29 இல் 12 தோட்டங்களில் பாம் எண்ணெய்ச் செய்கைக்காக தற்போது முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், விதை நடுகைக்காக 85% சதவீதமும் நீர்ப்பாசன தேவைகளுக்காக 50% சதவீதமும் மற்றும் இரசாயன பயன்பாட்டுக்காக மட்டுமன்றி அமைத்தல் கட்டமைப்புக்காக இடவசதிகளை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது சமையலுக்காக அதிகளவான எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாவாகும். மலேசியாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் தேவையான பாம் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதோடு, ஆர்ஜன்டீனா மற்றும் பிரெஸில் ஆகிய நாடுகள் சோய் எண்ணெயை உக்ரேய்னிலிருந்து இறக்குமதி செய்கின்றன.

பாம் எண்ணெய் எதிர்ப்புக்கு பின்னால் ஏனைய காரணிகள்

சமையலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் இறக்குமதி செய்வது நாட்டின் சாதகமான வியாபாரமாக மாறியுள்ளது. பிராந்திய ரீதியான இறக்குமதியாளர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்படும் மரக்கறி எண்ணெயினால் வாழ்கையை நடத்தும் ஒரு நிலையை உருவாக்கி அதனை மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்கின்றனர். அத்துடன் பாம் எண்ணெய் உற்பத்தி மேம்பாடு அவர்களது வர்த்தக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால் அதற்கு எதிராக ஒரு சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

குறைந்த நிலப்பரப்பில் நாட்டிற்குத் தேவையான சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெயை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் பாம் எண்ணெய்க்கு உள்ளது. அதனால் ஏனைய மரக்கறி எண்ணெய் செய்கையை விட மிகவும் இது உகந்ததாகும். றபர் செய்கையை விட பாம் எண்ணெய் செய்கைக்கு நீர் உரிஞ்சப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என சொல்லப்பட்டாலும் ஒரு ஹெக்டேயர் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாம் எண்ணெய் உற்பத்திக்காக உரிஞ்சப்படும் நீரை விட அதிகமான நீர் உரிஞ்சப்படுகின்றது. எனினும் தேயிலை அல்லது றபர் செய்கைக்காக முன்வைக்கப்படும் எதிர்ப்புக் கருத்துக்களை விட பாம் எண்ணெய் செய்கைக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எதிர்ப்பாளர்களுக்கும் பொய்யான வதந்திகளை உருவாக்குவோருக்கும் நாம் கூறவிரும்புவது வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களானது மனிதனது செயற்பாடுகளின் விளைவுகளே ஆகும். கால்நடை வளர்ப்பு, மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் மேலும் பல தொழில்களின் காரணமாக பசுமை இல்ல வாயு உமிழ்வு போன்ற சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பாக பாம் எண்ணெய்க்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு எந்தவொரு திட்டமும் இல்லையென்றே கூறவேண்டும். உலர் வலயத்திலுள்ளவர்கள் வறட்சியைக் குறைகூறிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஈரவலயத்தில் பாம் எண்ணெய் செய்கைக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் போது அங்கு வறட்சி ஏற்படாது என்பது குறித்தும் கண்டுகொள்ளாது விட்டுள்ளனர். இயற்கை பாதுகாப்பு தொடர்பான சர்வதேச சங்கத்தினால் (IUCN) வெளியிடப்பட்ட ´பாம் எண்ணெய் மற்றும் உயிரியல் மாற்றம்´ அறிக்கையின் தரவுகளுக்கு அமைய உலகிலுள்ள மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தமது உணவுக்காக பாம் எண்ணையை பயன்படுத்துகின்றனர். நாம் அதனை ஒரு விதத்தில் எதிர்த்தால் அந்த இடத்தை பிடிப்பதற்கு மேலும் பல எண்ணெய் வகைகள் சில ஆயத்தமாக உள்ளன. பாம் எண்ணெய் உற்பத்தியை கட்டியெழுப்புவதற்கு மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

அதற்காக அரச நிர்வாகத்தினர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகிப்போர் மிகவும் உறுதியான நிலைநிற்கையொன்றை பின்பற்றுவதற்கு உந்தப்படவேண்டும். ரெப்சீட், சோய் மற்றும் சூரியகாந்தி ஆகிய செய்கைகளினால் பாம் எண்ணெய் செய்கை அப்பால் தள்ளப்படுவதனால் பல்வேறு சுற்றாடல் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டி ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான சீரழிவுகள் ஏற்படுவதை தவித்துக்கொள்வதற்கு பாம் எண்ணெய் செய்கையினால் காடுகள் அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் பாம் எண்ணெய் பயன்பாட்டிற்குப் பதிலாக மாற்று திட்டமொன்றுக்கு செல்வதற்கு வேண்டிய சரியான விஞ்ஞான ரீதியான விடயங்களை முன்வைப்பதை விட வேறொரு விடயமும் இல்லையென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காடுகளை அழிக்காமல் புதிய பாம் எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்துடன் பாம் எண்ணெய் செய்கையின் போது காடுகளை அழிக்காமல் அதனை மேற்கொள்வதற்கு வேண்டிய சிறந்த முகாமைத்துவம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பாம் எண்ணெய் செய்கை தொடர்பாக விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து இலங்கையில் பாம் எண்ணெய் செய்கைக்காக அதனுடன் தொடர்புடைய அனைத்து பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய திட்டமொன்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவோமென பெருந்தோட்டதுறை சங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இலங்கையின் வடக்கில் உள்ள மனம் கவர்ந்தவர்களுக்கு Gift அனுப்ப நல்லதொரு வாய்ப்பு!! இங்கே அழுத்தவும்