இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? வெளியிடப்பட்ட புதிய தகவல்

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே இலங்கையில் உள்ள உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுடன் hi2world.com 

35 ஆயிரம் தொன் எரிபொருட்களுடன் கப்பல் ஒன்று இந்த மாதம் இலங்கை வரவுள்ளது. தற்பொழுது எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – பளுஹகவெலவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் தொடர்பில் அச்சம் அடைய வேண்டியதில்லை, எதிர்பாராத நிலை மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போதிலும், சிங்கப்பூர் அல்லது மலேவியாவில் இருந்து தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.