சீனாவுடனான பணப்பறிமாற்றல் ஊடாக அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனை எட்டியது

வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி என்பவற்றை மீள செலுத்துவதில் ஒருபோதும் நெருக்கடி ஏற்படாது. சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பண பறிமாற்றல் ஊடாகவே நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனை எட்டியுள்ளதான அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் மற்றும் ஜூன் மாதம் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.

கடனை மீள செலுத்துவதற்காக அரசாங்கத்திடம் காணப்படும் வேலைதிட்டம் என்ன என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதலளித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

வரலாற்றில் இலங்கையில் காணப்பட்ட அனைத்து அரசாங்கங்களும் உரிய நேரத்தில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தியுள்ளன. அதேபோன்று இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டிய சகல கடன் தவணைகளும், வட்டியும் உரிய நேரத்தில் மீள செலுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.

சீன அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பண பறிமாற்றத்தின் ஊடாகவே அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனாக அதிகரித்துள்ளது.

நாம் ஒரு ஸ்தரமான நிலைமையை அடைந்துள்ளோம். சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியுள்ளதோடு , வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களும் , ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன.

நாட்டில் இறக்குமதி செலவுகள் 20 பில்லியனாகக் காணப்படும் அதே வேளை, ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன்களாகவே காணப்படுகிறது. இதன் காரணமாகவே பாரிய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே தான் உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள அனைத்து கடன்களையும் மீள செலுத்த வேண்டிய பலம் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெறும தெரிவிக்கையில்,

டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையுடன் நீண்ட கால நட்புறவைப் பேணும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது. இன்னும் குழு நியமிக்கப்படவில்லை. அதற்கான குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱