இறப்பர் உற்பத்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக இறப்பர் உற்பத்தியை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இறப்பர் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் 75 ஏக்கரில் புதிதாக இறப்பர் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

மித்தெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் உற்பத்தி வெற்றியடைந்தமையால், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக, கட்டுவன, கல்பொத்தயாய பிரதேசங்களில் புதிதாக இறப்பர் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

உற்பத்தியாளர்கள் தமக்குத் தேவையான ஒட்டு இறப்பர் மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முடியுமென்பதுடன், ஒரு ஏக்கர் செய்கைக்கு 15,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com