வடக்கு விவசாயி கிருஷ்ணராஜாவின் புதிய கண்டுபிடிப்பு!!

வெளிநாட்டு மோகத்தில் திளைக்கும் தற்கால இளைஞர்கள் மத்தியில் தனது வெளிநாட்டு வாழ்க்கை இணை கைவிட்டு தனது தந்தையின் விவசாயத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில், சுவிஸ் நாட்டிலிருந்து மீளவும் தாயகம் திரும்பிய விவசாயியின் மகன் ஒருவர் தற்போது நவீன முறை யுக்திகளை பயன்படுத்தி நவீன விவசாயத்தில் ஈடுபடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்.

வடக்கு பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜா என்ற விவசாயியை தற்போது நவீன முறைகளைக் கடைப்பிடித்து மிகக் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் அவர் கண்டுபிடித்த இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வட மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உழவு இயந்திரம் மூலம் நவீன யுக்திகளை பயன்படுத்தி ஒரு சில மணித்தியாலத்தில் பொழுதின் மூடு இயந்திரத்தின் இவர் அறிமுகம் செய்துள்ளார். மிகக் குறைந்த செலவில் இந்த இயந்திரம் செய்விக்கப்பட்டது.

சொட்டுநீர் பாசனத்தின் ஊடாக அதிக விளைச்சலை பெறக்கூடிய வகையில் இந்த இயந்திரம் மூலம் மரக்கன்றுகளை நடும் பொழுதின் விழிப்பான இவர் அறிமுகம் செய்துள்ளார். இது தொடர்பில் கிருஷ்ணராஜா கருத்து தெரிவிக்கையில் ….

வெளிநாட்டு வாழ்க்கைஇணை கைவிட்டு தாயகம் திரும்பி உள்ளேன். தற்போது விவசாயத்துறை அழிந்து கொண்டே செல்கின்றது. அதேபோல் இங்குள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் குடிகொண்டுள்ளது. இது ஒரு வெளிநாட்டு மோக கலாச்சாரம் என்று சொல்லமுடியும்.

இங்குள்ள இளைஞர்கள் விவசாயத்தில் அதிகம் ஈடுபட வேண்டும். விவசாயம் மூலம் வெளி நாட்டில் வாழ்வதைவிட இங்கு அதிகளவான பணத்தினை சம்பாதிக்க முடியும். அதற்காகவே நான் இப்பொழுது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக நவீன விவசாய சக்திகளை கண்டுபிடித்து அதனை தற்போதுள்ள விவசாயிகளுக்கும் அறிமுகம் செய்து நீங்களும் அதனை செய்து உங்கள் விவசாயத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வாருங்கள் என்று நான் வேண்டிக் கொள்கின்றேன்…

இந்த இயந்திரம் மூலம் வெங்காயம், தக்காளி, பீட்ரூட், கரட், பச்சமிளகாய் போன்ற, மரக்கறி வகைகளை நாட்டிக் கொள்ள முடியும். இதற்கு கூலி ஆட்களும் தேவையில்லை. நேரம் மிகுதி, பணவிரயம் தவிர்க்கப்படும். அத்துடன் தூரல் நீர் பாசனம் மூலம் சிறந்த விளைச்சலையும் பெற்றுக் கொள்வதுடன் நீரினையும் நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் என்று கிருஷ்ணராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த இயந்திரம் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில்  விவசாய பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன்  விவசாய கண்காணிப்பாளர் எஸ். சாருஜன்,  பிரதேச சபையின் உப தவிசாளர் எம் கபிலன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com