நெடுந்தீவு குளத்தில் இறால் வளர்ப்பு திட்டம்

பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 6 இலட்சம் இறால்; குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி குளத்தில் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் கடந்த வியாழக்கிழமை (09.01.2020) நடைமுறைப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வைகாசி மாதம் அளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த இறால் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக சராசரியாக ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய அண்ணளவாக 7200 கிலோ கிராம் இறால்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com