கிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கிராமிய தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கரில் தற்போது பெறப்படும் 400 கிலோ கிராம் கொழுந்து, 900 கிலோ கிராம் முதல் ஆயிரம் கிலோ கிராம் வரை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், உற்பத்தியாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உயர் தொழில்நுட்ப முறைகளை துரிதமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com