நாட்டின் தேவைக்கு போதுமான அளவு அரிசி உள்ளது

நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்ட ஆய்விற்கமைய, நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக இந்த அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச தெரிவித்துள்ளார்.

அங்காடி வர்த்தக கடைகளில் போதுமான அளவு அரிசி விற்பனைக்கு உண்டு. கூட்டுறவுக் கடைகளிலும் அரிசி போதுமான அளவு இருப்பதாக அதிகார சபை கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டறியப்பட்டதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நெல் சந்தைப்படுத்தும் சபையிடமுள்ள அரிசி, தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. கிளிநொச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நெல் தற்போது கிடைக்க உள்ளது. இவற்றை அரிசியாக்கி விரைவாக சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்போகத்தில் நெல் அறுவடை ஓரளவு கிடைத்து வர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இம் மாத நடுப்பகுதியிலும் அடுத்த மாத ஆரம்பத்திலும் இந்த அறுவடைகள் முழுமையாக சந்தைக்கு வரவுள்ளமை விசேட அம்சமாகும்.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com