வர்த்தகர்களுக்கு கடன் சலுகை வழங்க அரசு தீர்மானம்

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் சலுகை பொதி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் நிதிச் சபையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்டுள்ள வங்கிகளும் பூரண ஆதரவையும் வழங்கியுள்ளன.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இவர்களுக்கான கடன் சலுகை வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் கடனை செலுத்த இலகு வழிமுறைகள் மற்றும் நீண்டகாலம் கடன் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com