வட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க மத்திய வங்கி தீர்மானம்

தனது கொள்கை வட்டி வீதத்தை எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக நிலையான வைப்பு வசதியை 7.7 சதவீதமாகவும், நிலையாக கடன் வசதிக்கான சதவீதத்தை 8 சதவீதமாகவும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நிதிச் சபை திர்மானித்துள்ளது.

சட்ட ரீதியிலான இருப்பு வீதம் 5 சதவீதமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் பண வீக்கத்தை 4 தொடக்கம் 6 சதவீதத்திற்கு உட்பட்டதாக உத்தேச வித்தியாசத்தில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கொள்கை வட்டி வீதம் தொடர்பில் அடுத்த மதிப்பீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

(விளம்பரம்) உலகில் எந்தப் பாகத்தில் இருந்தும் இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளுக்கு உதவி செய்யலாம் hi2world.com ஒன்லைன் ஷாப்பிங் ஊடாக