மீன்களின் தரத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவர்களுக்கு தௌிவூட்டல்

பிடிக்கப்பட்ட நன்னீர் மீன்களின் தரத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவர்களைத் தௌிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பிடிக்கப்படும் மீன்களைப் பாதுகாப்பான முறையில் அதன் தரத்துடன் கூடிய வகையில் களஞ்சியப்படுத்தல் தொடர்பில் தௌிவூட்டப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட மீன்களின் தரம் குன்றாமல் பாதுகாப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.