சீனி தயாரிப்பை மேம்படுத்த ‘உக் போகய’ கரும்பு உற்பத்தி

இலங்கையில் சீனி தயாரிப்பை மேம்படுத்துவதற்காக ‘உக் போகய’ என்ற கரும்பு உற்பத்தியை முக்கிய பெருந்தோட்ட உற்பத்தி என்ற ரீதியில் பெயரிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போதைய சீனி பாவனை வருடாந்தம் 670,000 மெற்றிக் தொன்னாகும். இந்த தேவையில் 90 சதவீதமானவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது.

இதற்காக வருடமொன்றிற்கு செலவிடப்படும் நிதி 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவை 2020ஆம் ஆண்டளவில் சீனியின் தேவை 700,000 மெற்றிக் தொன்களாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கரும்பை உற்பத்தி செய்வதற்காக மொனராகலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம் , திருகோணமலை, அம்பாறை, பதுளை மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் 104,000 காணிகள் அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையின் முக்கிய பெருந்தோட்ட பயிராக ‘உக் போகய’ என்று கரும்பு உற்பத்திக்கு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.