நீண்டநாள் மீன்பிடி படகுகளுக்கு குளிர்சாதன வசதிகள்

நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 30 வீதமானவை நுகர்விற்கு உகந்ததாக இருக்காது என கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, இதனை தவிர்ப்பதற்கு குறித்த படகுகளில் குளிர்சாதன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இந்து ரத்னாயக்க தெரிவித்தார்.

நாட்டில் சுமார் 5000 நீண்டநாள் மீன்பிடி படகுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1Kg சீனி இலவசம்!…
Mobile – 0094 77 199 7206
Phone – 0094 21 222 3433

lankaface.com