சிகிரியாவுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஈஸ்டர் ஞாயிறு சம்பவத்தினை அடுத்தது பின்னடைவை சந்தித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சிகிரியாவை பார்வையிடுவேரின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சிகிரியாவுக்கு வருகை தருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றலாப்பயணிகள் என்றும் மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளாந்தம் 900 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் தற்போது வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.